• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்

ByA.Tamilselvan

Jan 18, 2023

பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் தொடர்வதால் இந்தோனேசியா மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ‘ரிங் ஆஃப் பயர்’ மீது இந்தோனேசியா அமைந்திருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் இந்தோனேசியா பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர்6 அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கொரண்டலோவின் தென்கிழக்கே கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் (91 மைல்) தொலைவில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.