• Sat. Apr 27th, 2024

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

Byதரணி

Sep 28, 2022

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். என்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்தும் நானை காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணாமலையார்நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்க்காக பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் தொகுதி வாரியாக நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பாக நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
விடியா அரசை கண்டித்து சிவகாசியில் நடைபெறும் இந்த மாபெரும் கண்டன பொதுக் கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு வீர உரையாற்றுகின்றார். அவர்களோடு முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கண்டன பொதுக்கூட்டம் சம்பந்தமாக விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக விருதுநகரிலும், சிவகாசி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக சிவகாசியிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் தொண்டர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கூலிங் சீட் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா திமுகவில் உறுப்பினராக இருப்பதை பெருமை.
அண்ணா திமுகவை அழிக்க கலைஞரும் முயற்சி செய்தார் அவரது மகன் ஸ்டாலினும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றார். அது நடக்கவே நடக்காது. அண்ணா திமுகவின் .செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. திமுகவின் இந்த ஒன்றறை ஆ்ண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. இதனால் திமுக அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அதிமுகவின் செல்வாக்கு எடப்பாடியார் செல்வாக்கு அதிகரி்த்துக் கொண்டே வருகின்றது. ஆகையால் கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிவகாசி வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அண்ணா திமுகவின் எக்கு கோட்டையாகும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, இரட்டை இலை சின்னம், எடப்பாடியார் என அதிமுகவிற்கு விசுவாசமான தொண்டர்கள் இருக்கும்வரை அண்ணா திமுகவை யாராலும் அழிக்க முடியாது. அண்ணா திமுக எங்கே இருக்கின்றதோ அங்கு நாம் இருப்போம். இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கின்றதோ அங்கு கட்சியினர் இருப்பார்கள். கட்சி இருக்கும் இடத்தில் தான் எடப்பாடியார் இருக்கின்றார். எடப்பாடியார் இருக்கும் இடத்தில் நாம் இருக்கின்றோம். அண்ணா திமுகவை இரட்டை இலை சின்னத்தை யார் காப்பாற்றுகின்றார்களோ அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டியது நமது கடமை. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் எடப்பாடியாரை திரண்டு வந்து திருவிழா போன்று வந்து வரவேற்க வேண்டும். கட்சிக்கு வால் போஸ்டர் ஒட்டி வளர்ந்து வந்தவன் நான். அண்ணா திமுகவில் உழைப்பவன் பிழைப்பான். இதற்கு நானே அடையாளம். புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி, எடப்பாடியார் பெயரை கூறியவர்கள் வாழ்ந்ததாகத்தான் வரலாறு இருக்கும். இப்போது மக்கள் தங்களது பிரச்சினைகளை அதிமுகவினர்களிடம் மட்டுமே கூறுகின்றனர். ஏனென்றால் நம்மிடம் சொன்னால் சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் இன்றும் நம் மீது வைத்துள்ளனர் என்று பேசினார்.
கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, வத்திராயிருப்பு ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குறிஞ்சி முருகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.சி.ஓ காலனி மாரிமுத்து, மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேஷ்குமார்,
சுந்தரபாண்டியம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயகிரி, எஸ்.கொடிக்குளம் பேருராட்சி, வத்திராயிருப்பு பேரூராட்சி, சுந்தரபாண்டியன் பேரூராட்சி, செட்டியார்பட்டி பேரூராட்சி, வ.புதுப்பட்டி பேரூராட்சி, மம்சாபுரம் நிர்வாகிகள், மற்றும் மாவட்ட நகரக் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *