• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

Byகாயத்ரி

Apr 25, 2022

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விலைவாசி உயர்வும் சேர்ந்தே வந்து விடுகின்றது என்றும் திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் என்றும் முன்னாள் அமைச்சர்
கே.டி .ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக கழக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மற்றும் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர்…
கிஷோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

ஜனநாயக முறைப்படி அதிமுகவில் கழக அமைப்புத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திமு.க ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவத்து வருகின்றனர். ஆனால் அதற்கு மத்திய அரசை குறை சொல்லி காலம் கடத்தும் முயற்சியில் அக்கட்சியினர் செய்துவருகின்றனர். இந்த குற்றச்சாட்டை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். மின் வெட்டு பிரச்சனையில் தி.மு.க அரசு தினறிவருகிகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வரும் பொதெல்லாம் விலை வாசி உயர்கிறது.மின்வெட்டுவாடிக்கையாகி விட்டது. திமு.க ஆட்சிக்கு வாக்களித்தற்கு பொதுமக்கள் தற்போது வேதனைபட்டு வெட்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க அரசு விரைவில் முடிவுக்கு வரும். தி.மு.க வால் அதி.மு. கவை அசைத்து பார்க்கமுடியாது. அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் எந்த தேர்தல் வந்தாலும் அண்ணா திமுக வெற்றி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அ.தி.மு.க வில் தொண்டர் அடித்தளமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் அண்ணா திமுக தான் இன்று ஆளுங்கட்சியாக மக்கள் பணியாற்றி வருகின்றது அ.தி.மு.க தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தேர்தலில் நமது அம்மா அவர்களின் ஆட்சியை மீண்டு அமைக்க வேண்டும் என்னையும் கழக நிர்வாகிகளும போட்டியின்றி தேர்வு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்
இக்கூட்டத்தில் விருதுநகர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எஸ். ஆர். ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, நகர கழக , பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.