துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்தார்.
இதை தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்டதிருத்த மசோத காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக சட்டப்பேரவையில் துணை வேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமனம் செய்வதற்காக ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்திருக்கின்றார்கள். இதனை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.
அப்போது பேசிய முதலமைச்சர் அவர்கள் நிறைய காரணங்கள் சொல்லி இருக்கின்றார்கள். குறிப்பாக 1949ல் இருந்து பாஜக ஆளுகின்ற மாநிலமான குஜராத்தில் இந்த நடைமுறை உள்ளது. அருகிலுள்ள ஆந்திராவில் உள்ளது. சமீப காலகட்டத்தில் கேரளாவில் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார். சட்டப்பேரவையில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவைவை பாஜக எதிர்த்தது. ஆளுநரே எந்த துணைவேந்தர்களையும் நேராக நியமனம் செய்யவில்லை. தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் இது நடைபெறுகிறது.
. திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் திமுக துணை வேந்தர்கள் என்ற பதவியை ஒரு வியாபாரப் பொருளாக ஆளும் கட்சியை சார்ந்த, ஆளும் கட்சியை ஆதரிக்க கூடிய மனிதனுக்கு கொடுக்கக்கூடிய பதவியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் சங்கடமாக உள்ளது என தெரிவித்தார்.