மும்பையில் இன்று 107 ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 135 மிமீ மழை பெய்து, மே மாதத்திற்கான 107 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை மும்பையில் கனமழை போன்ற சூழ்நிலைகளும், கருமேகங்களும் ஏற்பட்டன. கொலாபாவில் உள்ள கடலோர ஆய்வகத்தில் காலை 8.30 மணி வரை 135 மிமீ மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாண்டாகுரூஸ் ஆய்வகத்தில் 33 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவுகளின்படி, கொலாபா ஆய்வகத்தில் மே மாதத்தில் 295 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 1918 மே மாதத்தில் பதிவான 279.4 மிமீ மழையின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. சாண்டாகுரூஸ் நிலையத்தில் இந்த மாதம் இதுவரை 197.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. மே மாதத்தில் இதுவரை அதிகபட்சமாக 2000 ஆம் ஆண்டில் 387.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மும்பையில் வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிப்பு
