விருதுநகர் சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி, தனியார் துறையில் பணியாற்றும் இவர் திமுக அனுதாபி. இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ரயில்வே கேட் அருகே உள்ள அண்ணா சிலையின் கீழ் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் திமுக கட்சி நிர்வாகிகளோ. உறுப்பினர்களோ கலந்து கொள்ளாமல் தனி ஒரு மனிதனாக தனது அன்பை செலுத்தினார்.