• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Sep 15, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது.

இங்கு தொழில் அபிவிருத்திக்காக சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது. தர்பூசணி பழத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது