• Fri. Jul 18th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..,

BySeenu

Jun 3, 2025

கோவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் மாநகர் மாவட்ட திமுக சார்பில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.