மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தென் தாமரைக்குளம் சந்திப்பில் பேரூர் செயலாளர் டாக்டர் தாமரை தேவசுதன் தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.*

இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.தாமரை தினேஷ் கேக் வெட்டினார். கட்சியின் நிர்வாகிகள் பூவை நடராஜன், முகுந்தன், முத்துகுமார், கிளை செயலாளர்கள் சாலமன் தங்கராஜ், சுந்தரலிங்கம், ரத்தினராஜ், பால்ராஜ், முத்து நாகமணி, மணி வேலன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூடியிருந்த அனைவருக்கும் கேக் வழங்கினார்.





