• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் முடக்கம்

Byவிஷா

Oct 5, 2024

பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2 நாட்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது..,
பாஸ்போர்ட் சேவை இணைய தளத்தில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ம் தேதி (நேற்று) இரவு 8 மணி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தைப் பயன்படுத்த முடியாது என்பதோடு, தங்களது நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பிறகு அணுகுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.