தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், மாநிலச் செயலாளர் எம்.ஜி.ராம்சாமி, வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் தணிகாசலம், சார்லஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.