• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…

ByKalamegam Viswanathan

Oct 3, 2023

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற செயலாளர் பாண்டி அறிக்கைவாசித்தார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விக்கிரமங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன் தலைமை தாங்கினார். உதவித் தலைவர் செல்வி செல்வம், முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். பானாமூப்பன்பட்டி கிராமத்தில் தலைவர் மகாராஜன் தலைமையில் துணைத்தலைவர் ஆறுமுகம் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சியில் தலைவர் ஜென்சிராணிசுப்பிரமணியன் தலைமையில் ஊராட்சி செயலாளர் குமார் அறிக்கை வாசித்தார். ஏரவார்பட்டி ஊராட்சியில் தலைவர் பாண்டி தலைமையில் ஊராட்சி செயலாளர் மலைச்சாமி அறிக்கை வாசித்தார்.