மதுரை மாவட்டம் சோழவந்தானில் நிழற் குடைகள் இல்லாததால் தொடர் மழை காரணமாக பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் மற்றும் பெண்கள் மழையில் நனைந்து சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

சோழவந்தானில் பேருந்து நிறுத்தங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை இதனால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் மற்றும் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்
கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பெண்கள் மழையில் நனைந்த வாரே பேருந்தில் ஏறி பயணம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது

பொதுமக்கள் பயணிகள் மற்றும் பெண்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தானில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
ஏற்கனவே பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் இது குறித்து மனுக்களாக வழங்கியும் இதுவரை நிழற்குடைகள் அமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்
இனிவரும் மழை காலங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் நிழற்குடைகள் அமைத்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்

திருவேடகம் மேலக்கால் சாலாச்சிபுரம் போன்ற சிறிய கிராமங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட எந்த இடத்திலும் நிழற்குடைகள் அமைக்கப்படாதது வருத்தத்துக்குரியதாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்








