வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பங்கேற்ற விஜய், பொதுமக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது காணொலி மூலம் உறுப்பினர்களிடம் பேசிய அவர், “எந்த பாகுபாடும் இல்லாமல் மக்கள் பணியாற்றுங்கள். விமர்சனங்களை புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.” குக்கிராமங்களில் கூட கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். 80 வயதில் உள்ளவர்களுக்கும் நம் கட்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.