• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி..,

BySeenu

Aug 11, 2025

கங்கா மருத்துவமனையின் ஒரு பிரிவான கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையம்,தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம்,கோயம்புத்தூர் பாரா டேபிள் டென்னிஸ் குழு ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாட்டின் முதல் மாநில அளவிலான பாரா டேபிள் டென்னிஸ் தரநிலை சாம்பியன்ஷிப் போட்டி 2025 கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகர் காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் மருத்துவர் ஆகியோர் டேபிள் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட பாரா விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும், காயத்தின் வகை அடிப்படையில் வகுப்பு 1 முதல் 10 வரை போட்டியிட்டனர்.

காலை முதல் மால வரை லீக் போட்டிகள்,நாக் அவுட் போட்டிகள், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் என பல்வேறு சுற்றுகள் நடைபெற்றது. பின்னர் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி விளையாட்டாளர்களின் உறுதி மற்றும் ஊக்கத்தை பாராட்டும் உரையை நிகழ்த்தினார்.