• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்

Byp Kumar

May 28, 2023

கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென தி மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் 28 வது ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மதுரையில்ஆவின் பால்பண்ணை எதிர் புறம் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் தி மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் 28 வது ஆண்டு விழா நடைபெற்றது இந்த ஆண்டு விழாவிற்கு பிரிண்டர் அசோசியேசன் தலைவர் நீலகண்டன் தலைமையிலும் செயலாளர் கிருஷ்ணகுமார் துணைத் தலைவர் குபேந்திரன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கணினி வரைகலை வல்லூனர் வீரநாதன் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இவ்விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் உடனடி முன்னாள் தலைவர் ஆனந்தன் கூறியது கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலைஉயர்வை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் முறையில்லா மின் கட்டணம் மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் குறுஅச்சகங்களுக்கு மாதம்தோறும் 15 லிட்டர் மன்னனை மானிய விலையில் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்
பேட்டி ஆனந்தன் முன்னாள் தலைவர்