• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொழில் வரி மற்றும் வீட்டு வரி வசூலிக்க முடியாமல் கோயில் உண்டியலில் போட்ட ஊராட்சி செயலாளர் – மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இராமநாதபுரம் அருகே தாமரைக்குளம் ஊராட்சி செயலாளர் தொழில் வரி மற்றும் வீட்டு வரி வசூலிக்க முடியாமல் கோயில் உண்டியலில் ரசிதை போட்டதால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தாமரைகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற செயளராக பணிபுரிந்த அப்பாஸ் என்பவர், பணியில் இருந்த காலத்தில் தொழில் வரி மற்றும் வீட்டு வரி ரசீதுகளை வசூல் பண்ணவராமல் தற்போது அந்த இரசீதுகளை கையில் வைத்து கொண்டு தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் போட்டுள்ளார்.

இந்நிலையில் கோவில் உண்டியலை ஊரார் முன்னிலையில் திறந்த தாமரைக்குளம் ஊர் பொதுமக்கள், உண்டியலில் கடந்த இரசீதுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கையில் தராமல் இரண்டு வருடமாக வைத்துக்கொண்டு கோவில் உண்டியலில் போட்ட ஊராட்சி செயலரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குனரிடம், தற்போது நொச்சியூரணி ஊராட்சியில் பணி புரியும் ஊராட்சி செயலர் அப்பாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.