ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ராமநாதபுரம் ஆட்சியரக கூட்ட அரங்கில் நடந்தது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர் பிரவின்குமார், கோட்டாட்சியர்கள் ஷேக் மன்சூர், முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், கருமாணிக்கம் உள்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்