• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பள்ளப்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு…

ByAnandakumar

May 26, 2025

குப்பை கிடங்கை மாற்றி அமைக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என்று இரண்டு கோரிக்கை வலியுறுத்தி, பள்ளப்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளப்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கினார்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது… கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி தெற்கு தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இல்லாத சமயத்தில் நகராட்சி குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது.

தற்பொழுது அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளது. பள்ளப்பட்டி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் தெற்கு தெரு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடப்பதால் அதிகம் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதி அடைவதாகவும் அதிக அளவு நோய் தொற்று ஏற்படுவதாகவும், இதனால் குப்பை கிடங்கை வேற இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். அதே பகுதியில் தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக கூறுகின்றனர். அதனை அமைத்தால் மேலும் பாதிப்பு அதிக அளவு இருக்கும் என்பதால் அதனை அமைக்க கூடாது எனவும், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளது.