• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பலிக்குமா அன்புமணியின் முதல்வர் கனவு… என்ன செய்ய போகிறார் ராமதாஸ் ?

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்துல நிறைவேறுது. நாம ஜெயிச்சுட்டோம் மாறானு அன்புமணி ராமதாஸ் ஆர்ம்ஸ்லாம் மொரட்டு தனமா தெரியுற மாதிரி குலுங்கி குலுங்கி ஆனந்த கண்ணீருல மிதந்துட்டு

இந்த ஒரு விஷயத்தை வச்சே 2021 சட்டமன்ற தேர்தல்ல இனி நம்ம ஆட்சி தான் , இது மாம்பழம் சீசன் அதுனால மாம்பழத்துக்கு ஓட்டு போடுங்கனு தொண்ட தண்ணி வத்த கத்தி ஓட்டு கேட்டாரு…ஆனா தேர்தல் முடிவுல வடதமிழகம் அப்படியே திமுக பக்கம் போயிடுச்சு.. உங்களுக்கு தான எல்லாமே செஞ்சோம் நீங்க இப்டி பண்ணுவீங்கனு எதிர்பார்க்கலனு சோக மாகிட்டாரு… ஆமாங்க இதுக்கு நடுவுல தான் அந்த சம்பவம் நடந்துச்சு

இது நிரந்தரமான சட்டம் இல்ல.. தற்காலிகம் தான்னு எடப்பாடி பழனிச்சாமி இன்னும் பலரும் அவங்களே சொல்லிருந்துருகாங்க… இதெல்லாம் கேட்டு பதறனுன ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கூட்டணி தர்மத்தை மீறிட்டீங்க , இது உங்களுக்கே நியாயமா அடுக்குமானு கதறிட்டு இருக்கும் போது சென்னை உயர்நீதிமன்றத்துல இனித்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல வழக்கு குவிந்தது.

ஏம்ப்பா இத நீங்களே என்னனு பாருங்கனு மதுரை பெஞ்ச்க்கு மாத்துனாங்க.. அங்க இந்த வழக்க விசாரிச்சவங்க மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டத்துல அனுமதி இருக்கா..சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாம எப்படி இட ஒதுக்கீடு வழங்குனீங்கனு கேள்வி மேல கேள்வி கேட்டு இது செல்லாதுனு அந்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்ட ரத்து செய்து உத்தரவு போட்டாங்க.. அதன் பிறகு புதுசா பொறுப்பேற்ற திமுக அரசும் நாங்க இவங்களுக்காக போராடி உரிமைய வாங்கி கொடுப்போம்னு உச்ச நீதிமன்றம் போனாங்க அங்கயும் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு சரி தான்னு சொல்லி அனுப்பிட்டாங்க…

இனி எப்படி நம்ம மக்கள் முகத்துல முழிக்கிறது…2026 தேர்தல் முதல்வராக அன்புமணி ராமதாஸை உருவாக்கணும்னு சபதம் எடுத்தது… டிரைன் மறிச்சு போராடினது..எல்லாம் வெறும் நடிப்பு தானா கோபால் என அன்புமணி ராமதாஸ் தன்னையே சுய பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். அடுத்த என்ன பண்ண போறோம்னு அவரே சொல்லுவாரு வெயிட் பண்ணி பார்க்கலாம்