மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுபாணி சுவாமி மலைக்கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்), ரோப் கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். வின்ச் ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்ளிலும் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் பயணிக்க அதிகளவில் பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக ஒரு நாளும், ஆண்டுக்கு 40 – 50 நாட்கள் வரையும் நிறுத்தப்படுகிறது.
அதன்படி, அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநியில் ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது.இதன் காரணமாக ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.