• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாக்., தூதருக்கே சம்பளம் இல்லை – மோசமாகும் பாகிஸ்தான் நிலைமை

Byமதி

Dec 4, 2021

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் பண வீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களான விலை இரு மடங்காகி உள்ளது.

மேலும் பணவீக்கம், பொருளாதார சீரழிவு, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. ஏழைகள் மட்டும் அல்லாமல், அரசு பணியில் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு உணர்ந்து கொள்ள மறுக்கிறது என எதிர்க்கட்சியானர் குற்றம்சாட்டி வருகின்றனர். பிரதமர் இம்ரான்கானை எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், செர்பியாவிற்கான பாகிஸ்தான் தூதர் வெளியிட்ட அறிக்கையில், முந்தைய வரலாற்று சாதனைகளை உடைக்கும் அளவிற்கு, பணவீக்கம் உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், நாங்கள் அமைதியாக இருந்து உங்களுக்காக எவ்வளவு காலம் அமைதியாக வேலை பார்ப்போம் என இம்ரான் கான் எதிர்பார்க்கிறார். பள்ளி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால், எங்களது குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இம்ரான் கானை விமர்சனம் தெரிவித்தும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.