மேற்குவங்க மாநிலம் புருலியா ரயில்நிலையத்தில் சந்த்ராகச்சி -ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டது. அப்போது இரண்டு பெண் பயணிகள் ரயில் வேகம் எடுப்பதை பொருட்படுத்தாமல் அவசரமாக பிளாட்பாரத்தில் குதித்தனர்.
முதலில் இறங்கிய பெண்மணி பிளாட்பாரத்தில் சற்று தள்ளி குதித்தார். இருப்பினும் அவர் வேகமாக சென்ற ரயிலில் இருந்து குதித்ததால் கீழே விழுந்தார். மற்றொரு பெண்மணி தண்டவாளத்திற்குஅருகாமையிலேயே கால்வைத்ததால் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே இருந்த இடைவெளியில் சிக்கினார்.ரயில் செல்லும் வேகத்தில் இழுக்கப்பட்டு தண்டவாளத்திற்குள் சென்றிருக்க வேண்டிய அப்பெண்ணை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பப்லு குமார் ஓடிச் சென்று துரிதமாக மீட்டார்.
ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் பப்லு மட்டும் அப்பெண்ணை மீட்காவிட்டிருந்தால் அந்தப் பெண்ணுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக் கூடும். இதனிடையே பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆர்.பி.எஃப் வீரர் பப்லுவை ரயில்நிலையத்தில் இருந்த பயணிகளும், சக அதிகாரிகளும் பாராட்டினர்.பெண் ரயிலில் இருந்து இறங்கி கீழே விழுவதும், பப்லு காப்பாற்றுவதும் ரயில்நிலைய மேடையில் இருக்கும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது.