• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

ஓவியர்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும். -ஓவியர்கள் கோரிக்கை..,

Byமுகமதி

Mar 26, 2026

தேர்தல் என்றால் சுவரெழுத்து விளம்பரம் நிச்சயமாக இடம்பெறும். சாலைகள் தோறும் வீதிகள் தெருக்கள்தோறும் வீடுகள் தோறும் சுவர்களில் தேர்தல் விளம்பரம், தேர்தல் நாள், வாக்களிக்க வேண்டிய சின்னம், அதற்குரிய வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்திருக்கும் கட்சி அல்லது கூட்டணி இவ்வளவும் இடம்பெற்று இருக்கும்.

வாக்களிக்கும் நாள் வரை அந்த விளம்பரங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் சுவர்களில் சுவர் எழுத்து விளம்பரங்கள் எழுதுவதற்கும் படங்கள் வரைவதற்கும் வரைகலைக் கலைஞர்களுக்கு கடும் கிராக்கி இருக்கும். வரைகலை என்பது படம் வரைவது மட்டுமல்ல எழுத்து பிழை இல்லாமல் எழுதுவதும் ஆகும். அதேபோல் கலர் காம்பினேஷன் என்று சொல்லக்கூடிய வண்ணக் கலவை தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிந்த திறமையான கலைஞர்களுக்கு இன்னும் கூடுதல் கிராக்கியும் ஏற்படும்.

ஆனாலும் அத்தனையும் இரண்டு வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. ஒன்று டி. என். சேஷன் என்ற அதிகாரியின் கடும் உத்தரவு. இன்னொன்று அறிவியலின் வளர்ச்சி. இந்த இரண்டின் காரணமாகவும் சுவரெழுத்து விளம்பரங்கள் எல்லாம் பெண்ணுக்கு தள்ளப்பட்டு பிளக்ஸ் போர்டுகள்தான் பளிச்சிடுகின்றன. ஆனாலும் சுவர் எழுத்தில் விளம்பரங்கள் என்பது இன்றைக்கும் தேவைப்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் புதுக்கோட்டைக்கும் ஓவியக் கலைக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அது குறித்து வேறொரு செய்தியில் பார்த்துக் கொள்ளலாம் என்றாலும் இன்றைக்கும் புதுக்கோட்டையில் நிறைய பேர் ஓவியப் பணியில் இருக்கிறார்கள். சுவர் எழுத்து விளம்பரங்களை பார்த்து பலகாலம் ஆகிவிட்டாலும் புதுக்கோட்டையை சேர்ந்த ஓவியர் திவ்யா ரவி என்பவர் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் வரையாமல் தனியாரது வீட்டு சுவர்களில் வீட்டு உரிமையாளர்களிடம் கட்சிக்காரர்களின் துணையோடு அனுமதி பெற்று தேர்தல் விளம்பரங்களை வரைந்து வருகிறார்.

பல கட்சிகளில் வேட்பாளர் யார் என்று தெரியாத நிலையில் வேட்பாளர்கள் யார் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்வதற்கு முன்பாகவே வேட்பாளர்களின் பெயர் இல்லாமல் தேர்தல் நாளை மட்டும் குறிப்பிட்டு கட்சிகளின் சார்பில் சுவரெழுத்து விளம்பரம் எழுதி வருகிறார். அவர் கூறுகையில் எங்களுக்கு வாழ்வாதாரமே இந்த ஓவியம் தான். இந்த நேரத்தில் தேர்தல் ஆணையமும் அரசும் எங்களுக்கு கருணை கூர்ந்து இது போன்ற விளம்பரங்கள் எழுதுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.