• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலையை அவதூறாக பேசிய நிர்வாகி ராமமூர்த்தி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்…

BySeenu

Mar 26, 2026

தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை சார்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை நவீன பகுதியில் உள்ள தனியார் அரங்கில் யுகாதி பண்டிகையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வந்தபோது திமுகவினர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அங்கிருந்து புறக்கணித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிபேரவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய பேரவையின் நிர்வாகி பாலாஜி உத்தமராமசாமி:-

தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை சார்ந்த ராமமூர்த்தி என்ற நிர்வாகி திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அண்ணாமலை அழையா விருந்தளியாக வந்த மேடையில் பேசியதாக கண்டனம் தெரிவித்தனர்.

அரசியல் ஆதாயத்திற்காகவும் பணத்திற்காகவும் ராமமூர்த்தி இதுபோல இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியானது முற்றிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் சமுதாயம் சாராமல் பங்கேற்றதாகவும் ராமமூர்த்தி மட்டும் ஒரு கட்சி சார்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.