• Sat. May 18th, 2024

Trending

வாக்காளர் திருத்த சிறப்பு முகாமில் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்..!

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் திருத்த சிறப்பு முகாமில், 15 லட்சத்து 33 ஆயிரத்தி 995 பேர் விண்ணப்பித்துள்ளதா தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாஹ_ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பைக் கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புழல்,…

வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : ஏ.டி.ஜி.பி..!

தனிப்பட்ட நபர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அனைத்து காவல்துறை உயரதிகாரிகாரிகளுக்கும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி அருண் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்..,“போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம்,…

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர் : அமலாக்கத்துறை..!

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச்…

அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்ற தமிழ் மற்றும் மலையாள இயக்குநர் பைஜு!

பிரபல திரைப்பட கலைஞர் இயக்குநர் பைஜு, சமூகத்தில் ஆற்றிய தலித்திய ஆதரவு செயல்பாடுகளுக்காக தேசிய அளவிலான அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்றுள்ளார். பைஜு 20 வருடங்களுக்கு மேலாக மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி கலைஞராக பணியாற்றி…

லையன்ஸ் கிளப் சார்பாக பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்..!

சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள உள்ள சிவன்பார்க்கில் லையன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கமம் மற்றும் சமர்ப்பண் ஹெல்த்கேர் பவுண்டேஷன், அண்ணா அரசு ஆயுர்வேதா மருத்துவமனை, இராஜன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்…

நகைக்கடையில் பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக தெற்கு மாசி வீதி பகுதியில் ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு கடையில் உள்ளே மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.…

தேனியில் குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணி…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ஷஜீவனா விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து…

மதுரை டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி…

மதுரை டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர்கள் மங்கள்ராம். காயதரிமங்கள்ராம். தலைமை வகித்தனர். எட்டாம் வகுப்பு மாணவன் ஜெப்ரி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம்…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல், போதை பொருள் விற்பனை – அனைத்திந்திய மாணவர், ஆட்சியரிடம் மனு…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர்அளித்துள்ள…