• Sun. May 5th, 2024

வாக்காளர் திருத்த சிறப்பு முகாமில் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்..!

Byவிஷா

Nov 28, 2023

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் திருத்த சிறப்பு முகாமில், 15 லட்சத்து 33 ஆயிரத்தி 995 பேர் விண்ணப்பித்துள்ளதா தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாஹ_ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய கடந்த 27ம் தேதி முதல் வருகிற டிசம்பர் 9ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் வசதிக்காக நவம்பர் 4, 5ம் தேதி மற்றும் நவம்பர் 25, 26ம் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 4, 5ம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, 2வது கட்ட சிறப்பு முகாம், நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹ_ அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68,154 வாக்குச்சாவடி மையங்களில் திருவண்ணாமலை மாவட்டம் தவிர மற்ற 37 மாவட்டங்களில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று விண்ணப்பம் அளித்தனர்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹ_ தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 9,13,535 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்ய 4,99,302 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க 1,21,046 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *