• Mon. May 6th, 2024

டெல்லியில் சர்ச் இடிக்கப்பட்டதற்கும், ஸ்டென்ஸ்சாமி மர்ம மரணத்திற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

டெல்லியில் கிறிஸ்துவ தேவாலயம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், பாதிரியார் ஸ்டான்சாமி மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டில் சனியன்று கிறிஸ்துவ மக்கள் முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர அமைப்பாளர் சீலன் தலைமை வகித்தார். மாநில…

ஓலிம்பிக் போட்டியில் சீனா முதல் பதக்கம் வென்றது…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்இ வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.…

2 மாதங்களில் 32 வெளிநாடு தமிழர்கள் இறப்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி….

கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடு வாழ் தமிழர்கள் 32 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதி ஆய்வு செய்தார்…

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது…. பாஜக எதிர்ப்புக்கு ஸ்டாலின் அரசு அடிபணிந்ததா?

சர்ச்சை பேச்சில் சிக்கிய பாதியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் அருமனையில் பழைய தேவாலயம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு திறப்புவிழாவிற்கு காத்திருந்தது. இந்நிலையில் அந்த தேவாலயத்தை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் தேவாலயம் திறக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து…

அம்மா மரணம் சும்மா இல்லை…..

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அனுமார் வால் போல நிறைவடையாமல் நீண்டு கொண்டே போகிறது. இன்று வரை நீதி இறுதிப்படுத்தப்படாமல் மேலும் மாத காலத்திற்கு அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.…

ஆடிவெள்ளியில் மீனாட்சி சொக்கரை தரிசிக்க குவிந்த பக்தர்கள் ஆடி வெள்ளி பௌர்ணமி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்….

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமியும் ஒரே நாளில் வந்திருப்பதையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை அடுத்து உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சொக்க்நாதர்…

எழுவனம்பட்டி ஊராட்சித்தலைவருக்கெதிராக கொந்தளிக்கும் மன்ற உறுப்பினர்கள்….

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுவனம்பட்டி ஊராட்சியில் தலைவர் வசந்தாமணிவண்ணனுக்கு எதிராக துணைத்தலைவர் லதா உறுப்பினர்கள் முருகன் வீரலட்சுமி பெருமாள் சுதா பாண்டீஸ்வரி சுந்தர்ராஜ் தாமரைச்செல்வி சிவனேசன் ஆகியோர் வெள்ளியன்று திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் கூறினர். ஊராட்சி நிர்வாகம்…

25 பள்ளி மாணவர்கள் கடத்தல் பீதி பீதியில் வேனிலிருந்து குதித்த மாணவர்கள்….

தங்களை கடத்திவிட்டதாக மினிவேன் ஆட்டோட்வில் இருந்த குதித்த பள்ளி மாணவர்கள் படுகாயம். பிள்ளைகளை கடத்தவில்லை என ஓட்டுநர் விளக்கம். தஞ்சாவூர் மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளிக்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில்…

தனியார்மயத்திற்கெதிராக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கெதிராகவும், வேலை நிறுத்த உரிமை பறிப்பு சட்டத்திற்கு எதிராகவும், பொதுதுறை எல்.ஐ.சி, வங்கி தனியார் மயத்திற்கு எதிராகவும். இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளியன்று பிற்பகல் பெரியார் சிலை அருகில் உள்ள…

பாதுகாப்புத்துறை தனியார் மயத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்….

பாதுகாப்புத்துறையை தனியார்மயமாக்காதே பொதுத்துறை நிறுவனங்களை விற்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. வெள்ளியன்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ;இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பாக கே.பிரபாகரன் கே.ஆர்.கணேசன எல்.பி.எப் சார்பாக அழகர்சாமி பாலு ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக…