பொன்மொழி
1. துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.
2. கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நரகத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள்.
3. எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய அது நிறைவேறுவது என்பது சாத்தியமல்ல.
4. உள்ளதை பயத்திற்கு இரையாக்க வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.
5. உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருத்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.








