

சிந்தனைத்துளிகள்
• உன் மீது நம்பிக்கையற்றவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டு
நம்பிக்கை வைப்பவர்களிடம் நண்பனாக வாழ்ந்துவிட்டாலே போதும்…!
• ஆயிரம் உறவுகள் தர முடியாத தைரியத்தை…
ஒரு அவமானம் தந்து விடுகிறதே…!
• வழிகள் இல்லாமல் பாதைகள் பிறக்காது…
வலிகள் இல்லாமல் வாழ்க்கை சிறக்காது…!
• வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது
தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது!
• தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!
