• Mon. Mar 17th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 18, 2024

சிந்தனைதுளிகள்

வெற்றியும் தோல்வியும் இரு படிகளே.. ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்.. மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்.

அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல.. அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை.

துன்பம் பல கொடுத்து அதை மறக்க.. இன்பம் சில கொடுத்து எதுவுமே இலகு இல்லை என்பதை நொடிக்கொரு முறை கூறிச் செல்கிறது வாழ்க்கை.

தனக்காக வாழ்வது இன்பம்.. பிறருக்காக வாழ்வது பேரின்பம்.!

மனிதனின் தேவையில் மற்றவர்களின் சேவையும் அடங்கி இருக்கிறது.. அதை அறிந்து வாழும் போது வாழ்க்கை அழகாக மாற மாற்றம் பிறக்கிறது.