பொன்மொழிகள்
முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம்.
எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை.
மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.
பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது.
அக்கறை உள்ளவனுக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கும்.
நம்பிக்கை ஆழமானால் கடலையும் தாண்டலாம்.
என் பணம், என் படிப்பு என்று சிறிதும் எண்ணாதே. நான் மக்களின் சேவகன், நான் பக்தன் என்று எண்ணிக் கொள்.
கண்களே உள்ளத்தின் வாசல். அதன் மூலம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
அவித்த நெல் முளைப்பதில்லை. பக்குவம் பெற்றவனுக்கு மறுபிறவி உண்டாவதில்லை.
விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.