• Wed. Feb 12th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 21, 2023

சிந்தனைத்துளிகள்

1. திறமை என்பது அனுபவம், அறிவு, ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் வெளிப்பாடே.

2. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு.

3. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு.

4. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம்.

5. அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக் குறையையும் பொறுக்காது.

6. முடிந்ததை நினைப்பவன் மனிதன்; நினைத்ததை முடிப்பவன் இறைவன்.

7. பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும், செலவு செய்யும்போதும் தீமை பயக்கும்.

8. அரும்பெரும் செயல்களைச் செய்ததும், செய்யப்போவதும் தன்னம்பிக்கையே.

9. எம்முடைய இறப்பை பற்றி நாம் மறந்திருக்கும் வரை, அது ஒருபோதும் எமக்கானது அல்ல.

10. பிரிவின் வேதனையில் மட்டுமே நாம் அன்பின் ஆழத்தைக் காண முடியும்.

11. பொய்மை எளிதானது, உண்மை மிகவும் கடினமானது.