

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பி.எஃப். மீதான வட்டி விகிதம் நாளுக்கு நாள் குறைவது தொழிலாளர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று ஓ.பி.எஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
