உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பி.அய்யப்பன் இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்.,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைகிறது.,
இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சசிக்கலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பி.அய்யப்பன், தென்னை மரக்கன்றுகளை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.அய்யப்பன்., தென்னந்தோப்பு சின்னத்தில் அமோக வெற்றியை பெருவேன் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னால் முடிந்த நலத்திட்ட பணிகளை உசிலம்பட்டி மக்களுக்கு செய்துள்ளேன் ஆதலால் வெற்றி பெறுவேன் என பேசினார்.,



