• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புகைப்படங்களை பார்த்து நொந்து போன ஓவியா ஆர்மி

By

Sep 12, 2021 ,

நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. கடந்த 2017- ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் சீசன் 1” தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.அதன் மூலம் ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிக பட்டாளமே வைத்துள்ளார்.

தற்போது தமிழில் நடிகை ஓவியா சம்பவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் இரண்டு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் ஓவியா மெலிந்த தோற்றத்தில் உள்ளதால் அவரது ரசிகர்கள் இது ஓவியாவா என கேட்டு கவலை அடைந்துள்ளனர்.