ஓடு தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு என்ற முழக்கத்துடன் கிம்ஸ் ெஹல்த் நாகர்கோவில் நடத்திய மாரத்ததான் ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

கிம்ஸ் ெஹல்த் நாகர்கோவில், 2024 செப்டம்பரில் தொடங்கப்பட்டு முழுமையான சுகாதார சேவைகளை வழங்கி வரும் முன்னணி மூன்றாம் நிலை மருத்துவமனையாகும். பொதுமக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஓடு தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு என்ற முழக்கத்துடன் கிம்ஸ் ெஹல்த் மாரத்தான் சீசன்–2 நிகழ்வை நேற்று நடத்தியது.
இதில் மொத்தம் 1200க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், 750 ஆண்கள், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஓட்டப்பந்தயம், சுங்கான்கடையில் அமைந்துள்ள கிமஸ் ெஹல்த் நாகர்கோவில் மருத்துவமனை மற்றும் புற்றுநோய் மையத்தில் இருந்து தொடங்கி, புதிய பைபாஸ் சாலையைச் சுற்றி மீண்டும் கிம்ஸ் ஹல்த் நாகர்கோவில் மரு்ததுவமனையில் முடிவடைந்தது. 5,10,21 கி.மீ, என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
21 கி.மீ அரை மாரத்தான் காலை 5.30 மணிக்கு தொடங்கியது. 10 கி.மீ ஓட்டம் காலை 6.00 மணிக்கும், 5 கி.மீ ஓட்டம் காலை 6.30 மணிக்கும் தொடங்கி காலை 9.00 மணியளவில் நிறைவடைந்தது.
இந்த ஓட்டப்பந்தயத்தை கிம்ஸ் ெஹல்த் தலைமை செயல் திட்ட அதிகாரி கிரிபேஷ் ஹரிஹரன், கிம்ஸ் ெஹல்த் மாரத்தான் இயக்குனர் டாக்டர் ரஜீஷ் செல்வகணேசன, கிம்ஸ்ெஹல்த் மண்டல இயக்குனர் டாக்டர் தீபக் விஜயன் மற்றும் கிம்ஸ் ெஹல்த் நாகர்கோவில் மருத்துவர்கள், மூத்த நிர்வாக குழுவினர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து முக்கிய உரையாற்றினார். அதன் பின்னர் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கிம்ஸ் நாகர்கோவில் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். தாணு, கிளினிக்கல் இயக்குனர் டாக்டர் ராமன் முரளிதரன், புற்றுநோய் நிபுணர் டாக்டர் குமணன் , ஆலோசகர் ஆசிப், முதன்மை செயலாக்க அதிகாரி வன்ஷி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிம்ஸ் மாரத்தானின் முக்கிய நோக்கம், குறிப்பாக நோயாளிகளிடமிருந்து உறுப்பு தானம் செய்வதின் அவசியம் மற்றும் அதன்மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதைக் குறித்து பிராந்திய மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதே ஆகும்.
21 கி.மீ – அரை மாரத்தான், 10 கி.மீ – ட்ரீம் ரன், 5 கி.மீ – குடும்ப மகிழ்ச்சி ஓட்டம் / நடை என மூன்று பரிவுகளாக நடைபெற்றது.
மாரத்தான் வெற்றியாளர்கள் :
21 கி.மீ ஓபன் ஆண்கள் பிரிவில் நிகில் குமார், பெண்கள் பிரிவில்
சி. சித்ரா , 10 கி.மீ. ஆண்கள் பிரிவில் அஜ்மல், பெண்கள் பிரிவில் ஜி. ஜின்சி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.






