• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அறநிலையத்துறை கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவு…

Byகாயத்ரி

Dec 25, 2021

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டும் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் கோயில்களில் பிரசாதம் தயாரிப்பு, தீபம் ஏற்றுவதற்கு ஆவின் நெய், வெண்ணெய் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணெய் மற்றும் நெய் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.