• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Byவிஷா

May 25, 2024

கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை கனமழை காரணமாக 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு கொச்சியில் கனமழை பெய்தது. நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆலுவா நகரில் குறிப்பாக மார்க்கெட் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர மாநிலத்தில் ஆங்காங்கே மரம் முறிந்து விழுந்தது, சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது என நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் 8 நிவாரண முகாம்களில் 223 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மழை நிலவரம்: தமிழகத்தில் இன்று (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.