• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…

Byகாயத்ரி

Nov 8, 2021

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு வீடுகளை சூழ்ந்து சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது.


பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தமிழக அரசால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 11ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.