உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வளைகுடா மலேசியா தளபதி பேரவைச் செயலாளர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வளைகுடா மலேசியா தளபதி பேரவை செயலாளர் SKS சிக்கந்தர் பாபு மலேசிய தொழிலதிபர் உஸ்தாத் அல் ஹாஜ் ஷேக் மதார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சிக்கு மன்ற மாவட்ட செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.மன்ற மாவட்ட துணை தலைவர் மருகை சுரேஷ் மன்ற மாவட்ட துணைசெயலாளர் வீரா மொபைல்ஸ் முத்துச்சாமி நெல்லை மாநகர பொருளாளர் குரு ஜெஸி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.