• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் இபிஎஸ் அணியில் இணைந்தார்

ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை நேரில் சந்தித்து தொணடர்களுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி. முருகானந்தம் தலைமையில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏஎல். தங்கராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் சிவமுருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ். ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆர். அர்த்தநாரீஸ்வரன் ஆகியோர் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளனர்.
இது தொடர்பாக சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை நேரில் சந்தித்து தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.