செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்கு நேற்று சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே நடந்த இரட்டை தலைமை பிரச்சனை குறித்து பிரதமரை தனித்தனியே சந்திக்க போவதாக தகவல் வெளியானது நாம் அறிந்ததே. இதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் 10 நிமிட சநத்திப்பில் இணைந்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ் முக மலர்ச்சியுடன் பத்தரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியாவது, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். அந்த 10 நிமிட சந்திப்பில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஏதாவது நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போ இபிஎஸ்-ன் கதை என்னவாகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.