• Tue. Sep 10th, 2024

குடியரசு தலைவர் தேர்தலில் தனது ஓட்டை பதிவிட்ட ஓபிஎஸ்…

Byகாயத்ரி

Jul 18, 2022

இன்று இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும் அரசு தலைமையகம் விரைந்தார். ஆனால் கொரோனா தொற்று உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து தற்போது பிபிஇ கிட் அணிந்து வந்து தனது ஓட்டை பதிவிட்டார் ஓபிஎஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *