செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் கிராமத்தில் பேரியம்மன் கோவில் அமைந்துள்ளது .இந்த கோவில் பழமை வாய்ந்த கோவிலாக திகழ்ந்து வருகிறது.
நாளடைவில்இந்த கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கோவில் வந்துள்ளது.

இந்த நிலையில் கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பகுதிக்கு மட்டும் ஊர்வலம் செல்வதாகவும், ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிக்கு சாமி ஊர்வலம் வருவதில்லை என உயர்நீதிமன்றத்தில் பாபு என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
ஆனால் கடந்த ஆண்டு குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்த இடங்களுக்கு மட்டும் சாமி ஊர்வலம் சென்றுள்ளது. இதற்கு ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த ஏராளமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தங்கள் பகுதிக்கும் சாமி ஊர்வலம் வர வேண்டும் என ஆதிதிராவிடர் சமுதாய சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை கொண்டு தொடர்ந்து உள்ளனர்.
அவசர வழக்கு தொடர்ந்ததால் கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினர் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் அவசர கூட்டத்தை நடத்தினர்.
அப்பொழுது அறநிலையத்துறை அதிகாரி கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு ஊர்வலம் செல்லும் என பதில் அளித்த போது ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு கோவில் பற்றி என்ன தெரியும் என அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் தீண்டாமை ஒழியவில்லையா சாமி வா சாமி வா என அழைக்க வேண்டி இருக்கு, சில பகுதிக்கு மட்டும் தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என அரசு சொல்கிறதா,
எங்கள் பகுதிக்கே சாமி ஊர்வலம் வரவேண்டும், இல்லை என்றால் கழுத்தை அறுத்தாலும் பரவாயில்லை எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன்.எத்தனை காலம் நாங்கள் அடிமையாக இருப்போம்,கோவில் தேர் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றால் கோயிலை விட்டு தேர் செல்லக்கூடாது,
எங்களைப் பிடித்து ஜெயில்ல கூட போடுங்க, மதக் கலவரம் ஆக கூடாது என்றால் தேர் உலாவை ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதிக்கு கொண்டு வர வேண்டும் ,ஏன் எங்களை மனிதனாக கூட அதிகாரிகள் மதிப்பதில்லை, அரசு அதிகாரிகள் எங்கள் சமூகத்திற்கு துரோகம் செய்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.