மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தேவகோட்டை அருகே பொன்னலிக்கோட்டை ஊராட்சி செட்டியேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மனு அளித்தனர். புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டால் அமைதியாக உள்ள இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் விவசாய நிலங்களில் மதுபாட்டில்களை உடைத்து போடுவது போன்ற அநாகரிக செயல்கள் நடக்கும். என்பதால் கடையை திறக்க கூடாது என்று கோரிக்கை மனு அளித்தனர். இதனடிப்படையில் தேவகோட்டை தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தையில் புதிதாக கடை திறக்க படாது என்று முடிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் மதுபானக் கடை திறக்க பணிகள் நடந்து வருவதாக கூறி சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.