அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாஹாரிஸ_க்கு எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தற்போது வரை கருத்து கணிப்புகளின்படி கமலா ஹாரிஸ{க்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப் பல்வேறு வழிகளில் வெற்றி பெறுவதற்கு போராடி வருகிறார்.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப்பிற்கு அவரது கட்சி பிரமுகரே ட்விஸ்ட் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது தெற்கு கரோலினாவை சேர்ந்த குடியரசு கட்சி பிரமுகர் லின்ட்சே கிரகாம், தனது ஆதரவை டிரம்ப்பிற்கு வழங்காமல், எதிர் தரப்பான கமலா ஹாரிசுக்கு வழங்கி உள்ளார். இது அமெரிக்க அரசியலில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
