• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தென்பழஞ்சியில் கல்குவாரி அமைக்க மக்கள் கருத்து கேட்க கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமத்தில் ஏற்கனவே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தென் பழஞ்சியில் மேலும் புதிதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளிப்பது தொடர்பாக பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வடபழஞ்சி தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.

கல் குவாரி தொடர்பாக கருத்து கேட்கும் கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் தென்பழஞ்சி, மாவில்லிபட்டி மீனாட்சி பட்டி வடபழஞ்சி கிராம மக்கள் மற்றும் குவாரி உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குவாரி அமைந்தால் இப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும் என குவாரி உரிமையாளர் ஒருவர் பேசிய போது அதற்கு கிராம மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இருதரப்பு மக்களை சமாதானம் செய்தனர்.

தொடர்ந்து இருதரப்பு வாதத்தையும் கேட்ட அதிகாரிகள் கூட்டம் தொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தை நிறைவு செய்தனர் .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள் தென்பழஞ்சி கிராமத்தில் ஏற்கனவே குவாரி செயல் பட்டு வருகிறது எனவும் குறிப்பாக கண்மாய் பகுதியில் குவாரி அமைத்துள்ளதால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதாகவும் குவாரியில் வெடிக்கும் வெடி சத்தத்தால் வயல்களில் மேயும் ஆடுகள், மாடுகள் அலறி அடித்து ஓடுவதாகவும் இதனால் சரியாக இறை தேடக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,குவாரியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் வருவதால் சாலைகள் சேதம் அடைவதாகவும் விபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளதாகவும்.

மேலும் விவசாய பகுதியில் தூசிபடர்ந்து இருப்பதால் தங்களது விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் எனவே புதிய குவாரிக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவித்தனர்.