தமிழக முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் ஆணையின்படி கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாயில் பாசனத்திற்காக விநாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது .
இதன் மூலம் மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை வட்டங்களிலுள்ள கண்மாய்களுக்குச் செல்லும் 58 கிராம திட்டக் கால்வாயில் தண்ணீர் திறப்பால் மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி வட்டத்தில் 1,912 ஏக்கர் நிலங்கள் பாசனப் பயன்பெறும் வகையிலும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 2,285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் 33 கண்மாய்கள் மற்றும் ஏராளமான ஊரணி குளங்கள் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து கிணறுகளில் அதிக அளவில் நீர் சுரப்பு ஏற்பட்டு, விவசாயம் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது 58 வது நாளாக தொடர்ந்து வைகை அணையின் நீர்மட்டம் 69 ( மொத்த உயரம் 70 அடி )அடியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதால் ,தொடர்ந்து 58 கால்வாயில் 58 வது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .மேலும் எதிர்வரும் ஏப்ரல்-மே மாத கோடை காலங்களில் , வறட்சியை தாங்கும் அளவில் நீர் இருப்பு இருப்பதால் ,பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் எந்தவிதமான பாதிப்பும் வராது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.