குமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு.
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மற்றும் கன்னியாகுமரி அருகே சின்ன முட்டம் பகுதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் அதிகாலையிலே பெரும் கூட்டமாக திரண்டார்கள்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலின் முன் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் மார்கழி மாதத்தின் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்து நின்று சொர்க்கவாசல் திறப்பை தரிசனம் செய்தனர்.